F – Maj / 3 / 4 | T – 155
நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித் துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை
1 . உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதய்யா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை
2 . பலியான செம்மறி பாவங்களெல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை
3 . எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மை பிரியேன் ஐயா
சித்தமே செய்து சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே
இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனை