Back

170 . Kati pidithaen | கட்டிப் பிடித்தேன் 

170 . கட்டிப் பிடித்தேன் 

E – min 6 / 8 | T – 92 

கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை 

கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே 

இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே 

இளைஞரெல்லாம் இயேசுவுக்காய் 

வாழ வேண்டுமே 

இரங்கும் ஐயா 

மனம் இரங்குமையா

1 . துப்பாக்கி ஏந்தும் கைகள் – உம் 

வேதம் ஏந்த வேண்டும் 

தப்பாமல் உம் விருப்பம் 

எப்போதும் செய்ய வேண்டும் 

2 . பழிக்கு பழி வாங்கும் 

பகைமை ஒழிய வேண்டும் 

மன்னிக்கும் மனப்பான்மை 

தேசத்தில் மலர வேண்டும்  

3 . பிரிந்த குடும்பமெல்லாம் – 

மறுபடி இணைய வேண்டும் 

பெற்றோரின் கண்ணீர் எல்லாம் –

களிப்பாய் மாற வேண்டும் 

We use cookies to give you the best experience. Cookie Policy