172 . போராடும் என்
F – Maj | 3 / 4 | T – 140
போராடும் என் நெஞ்சமே
புகலிடம் மறந்தாயோ
பாராளும் இயேசு உண்டு பதறாதே மனமே
1 . அலைகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே
ஆ ஆ . . . ஆனந்தம் பேரானந்தம்
என் ( நம் ) அருள்நாதச் சமூகத்திலே ( 2 )
2 . கடந்ததை நினைத்து தினம்
கண்ணீர் வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி . . . நன்றி . . சொல்லு – ஆ . ஆனந்தம்
3 . வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு
4 . நண்பன் கைவிட்டானோ ( நீ )
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு