Back

173 . Sannaigalai | சேனைகளாய் 

173 . சேனைகளாய் 

E – min 6 / 8 | T – 120 

சேனைகளாய் எழும்பிடுவோம் 

தேசத்தை கலக்கிடுவோம் – புறப்படு 

இந்தியாவின் எல்லையெங்கும் 

இயேசு நாமம் சொல்லிடுவோம் – புறப்படு 

புறப்படு புறப்படு 

தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு 

1 . பாதாளம் சென்றிடும் 

பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா . . 

பட்டணங்கள் , கிராமங்களில் 

கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா . .

2 . உலக இன்பம் போதுமென்று 

பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும் . 

பாவ சேற்றிலே மூழ்கி பணத்திற்காக 

வாழ்பவர்கள் மனந்திரும்பணும் 

3 . அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு 

அறியாயோ மகனே . ( மகளே ) 

பயிர்கள் முற்றி அறுவடைக்கு 

தயாராக உள்ளது தெரியாதா மகனே . ( மகளே ) 

4 . இயேசு நாமம் அறியாத எத்தனையோ 

கோடிகள் இந்தியாவிலே 

இன்னும் சும்மா இருப்பது நியாயம் 

இல்லையே தம்பி ( தங்கச்சி ) இன்றே புறப்படு 

5 . வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன 

இதயங்கள் லட்சங்கள் உண்டு . . 

உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய் 

வாழ்பவர்கள் கோடிகள் உண்டு

We use cookies to give you the best experience. Cookie Policy