Back

174 . Um Namaam | உம் நாமம் 

174 . உம் நாமம் 

F – Maj | 3 / 4 | T – 135 

உம் நாமம் உயரணுமே 

உம் அரசு வரணுமே 

உம் விருப்பம் நடக்கணுமே 

அப்பா பிதாவே அப்பா ( 4 ) 

1. அன்றாட உணவை , ஒவ்வொரு நாளும் 

எனக்குத் தாரும் ஐயா 

2 . பிறர் குற்றம் மன்னித்தோம் , ஆதலால் எங்கள் 

குறைகளை மன்னியுமே . . 

 3 . சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து 

விடுதலை தாருமையா . . 

4 . ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை 

என்றென்றும் உமக்கே சொந்தம் .

5 . ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும் 

சமாதானம் வரணுமே 

6 . ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும் 

உம் வசனம் சொல்லணுமே 

7 . அரசியல் தலைவர்கள் M . L . A . , M . P . க்கள் 

உம்மை அறியணும் 

உம் நாமம் சொல்லணுமே .

We use cookies to give you the best experience. Cookie Policy