Back

175 . pallangalellam | பள்ளங்களெல்லாம் 

175 . பள்ளங்களெல்லாம் 

F – Maj | 6 / 8 | T – 106 

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் 

மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும் 

கோணலானவை நேராகணும் 

கரடானவை சமமாகணும் 

இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் ( 2 ) 

இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்லுவோம் ( 2 ) 

1 . நல்ல கனிகொடா மரங்களெல்லாம் 

வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் 

2 . கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து 

பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே 

3 . அந்நாளில் வானம் வெந்து அழியும் 

பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும் 

4 . கறையில்லாமலே குற்றமில்லாமலே 

கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் 

5 . அனுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம் 

அபிஷேக எண்ணெயால் நிரம்பிடுவோம்

We use cookies to give you the best experience. Cookie Policy