179 . உம் சமூகமே
C – min / 34 / T – 95 –
உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்க . . .
இராஜா . . . இயேசு இராஜா –
1 . ஒரு கோடி செல்வங்கள் எனைத்
தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
செல்வமே , ஒப்பற்ற செல்வமே
நல் உணவே நாளெல்லாம் உம் நினைவே
2 . என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் , ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும்
3 . எத்தனையோ எழில்மிகு காட்சிகள் கண்டாலும்
எல்லாமே மாயை ஐயா – 2
தண்ணீரே , ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
மூழ்கணுமே