Back

188 . Eluputhal | எழுப்புதல் 

188 . எழுப்புதல் 

F – Maj / 6 / 8 / T – 110 

எழுப்புதல் என் தேசத்திலே ( இந்தியாவில் ) 

என் கண்கள் காண வேண்டும் 

தேவா கதறுகிறேன் 

தேசத்தின் மேல் மனமிரங்கும் 

1 . சபைகளெல்லாம் தூய்மையாகி 

சாட்சியாக வாழணுமே 

2 . தெருத் தெருவாய் என் இயேசுவின் நாமம் 

முழங்கணுமே முழங்கணுமே 

3 . கோடி மக்கள் சிலுவையைத் தேடி 

ஒடி வந்து சுகம் பெறணும் 

4 , ஒருமனமாய் சபைகளெல்லாம் 

ஒன்று கூடி ஜெபிக்கணுமே 

5 . ஆதி சபை அதிசயங்கள்  

அன்றாடம் நடக்கணுமே 

6 . துதி சேனை எழும்பணுமே 

துரத்தணுமே எதிரிகளை 

7 . மோசேக்கள் கரம் விரித்து 

ஜனங்களுக்காய் கதறணுமே  

8 . ஸ்தேவான்கள் எழும்பணுமே 

தேவனுக்காய் நிற்கணுமே

We use cookies to give you the best experience. Cookie Policy