Back

192 . Nandri bali | நன்றி பலி 

192 . நன்றி பலி 

D – Maj / 4 / 4 / T – 120 

நன்றி பலி நன்றி பலி 

நல்லவரே உமக்குத்தான் 

அதிகாலை ( எப்போதும் ) ஆனந்தமே – என் 

அப்பா உம் திருப்பாதமே 

1 , நேற்றைய துயரமெல்லாம் 

இன்று மறைந்ததையா 

நிம்மதி பிறந்ததையா ( அது ) 

நிரந்தரமானதையா 

கோடி கோடி நன்றி டாடி ( 3 ) 

2 . இரவெல்லாம் காத்தீர் 

இன்னும் ஓர் நாள் தந்தீர் 

மறவாத என் நேசரே ( இன்று ) 

உறவாடி மகிழ்ந்திடுவேன் 

3 , ஊழியப் பாதையிலே 

உற்சாகம் தந்தீரையா 

ஓடி ஓடி உழைப்பதற்கு 

உடல் சுகம் தந்தீரையா – நான்  

4 . வேதனை துன்பமெல்லாம் 

ஒரு நாளும் பிரிக்காதையா 

நாதனே உம் நிழலில் ( நான் ) 

நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு  

5 . ஜெபத்தைக் கேட்டாரைய்யா 

ஜெயத்தைத் தந்தீரையா 

பாவம் அனுகாமலே 

பாதுகாத்து வந்தீரையா 

6 , என் நாவில் உள்ளதெல்லாம் 

உந்தன் புகழ்தானே 

நான் பேசி மகிழ்வதெல்லாம் 

உந்தன் பெருமை தானே

We use cookies to give you the best experience. Cookie Policy