Back

196 . Appa umaai | அப்பா உம்மை 

196 . அப்பா உம்மை 

D Maj / 3 / 4 | T – 135 

அப்பா உம்மை நேசிக்கிறேன் 

ஆர்வமுடன் நேசிக்கிறேன் 

1 . எப்போதும் உம் புகழ்தானே 

எந்நேரமும் ஏக்கம் தானே 

எல்லாம் நீர்தானே – அப்பா 

2 . பலியாகி என்னை மீட்டீரையா 

பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா 

ஒளியாய் வந்தீரையா – ஐயா 

3 . உந்தன் அன்பு போதுமையா 

உறவோ பொருளோ பிரிக்காதையா 

என் நேசர் நீர்தானையா – ஐயா 

4 . கண்ணீர் துடைக்கும் காருண்யமே 

மன்னித்து மறக்கும் தாயுள்ளமே 

விண்ணக பேரின்பமே – அப்பா 

5 . அனுதின உணவு நீர்தானையா 

அன்றாட வெளிச்சம் நீர்தானையா 

அருட்கடல் நீர்தானையா – எனக்கு 

6 . ஒரு குறையின்றி நடத்துகின்றீர் 

ஊழியம் தந்து மகிழ்கின்றீர் 

அருகதை இல்லையையா – ஐயா 

7 . ஜெபமே எனது ஜீவனாகணும் 

ஜெயக்கொடி எனது இலக்காகணும் 

ஊழியம் உணவாகணும்

We use cookies to give you the best experience. Cookie Policy