197 . வசதியைத் தேடி
F – Maj / 4 / 4 / T – 170
வசதியைத் தேடி ஓடாதே – அது
தொடு வானம்
வசதிகள் நிறைவு தருவதில்லை
வானத்தை எவரும் தொடுவதில்லை
1 . வசதி வந்தால் பயன்படுத்து
சுவிசேஷம் சொல்வதற்கு
ஆளுகை செய்ய நோ நோ நோ ( No . No . No )
அடிமைப்படுத்த நோ நோ நோ – வசதிகள்
2 . அழகெல்லாம் அற்றுப் போகும்
எழில் ஏமாற்றும்
கவர்ச்சி எல்லாம் ஒரு கானல் நீர்
கடந்து போகும் சீக்கிரத்தில்
3 . வெட்டுக்கிளி காட்டுத்தேன்
உண்டு வந்தார் யோவான்
உலகத்தை கலக்கிய மனிதர் அவர்
உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல்
4 . பணமயக்கம் எல்லாவித
தீமைகளின் தொடக்கம்
சிற்றின்பம் எச்சரிக்கை – ( உன்னை )
நடைபிணமாக்கிவிடும்