219. துதியின் ஆடை
E – Maj / 6 / 8 / T – 115
துதியின் ஆடை அணிந்து
துயரம் எல்லாம் மறந்து
துதித்து மகிழ்ந்திருப்போம் – நம்
தூயவரில் மகிழ்ந்திருப்போம்
1 . இந்த நாள் கர்த்தர் தந்த நாள்
இதிலே களிகூறுவோம்
புலம்பல் இல்ல இனி அழுகையில்ல
இன்று புசித்துக் கொடுத்துக் கொண்டாடுவோம்
துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம்
துயரம் அனைத்தும் மறந்திருப்போம்
2 . கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால்
அது தானே நமது பெலன்
எத்தனையோ நன்மை செய்தவரை
இன்று ஏற்றிப் போற்றிப் புகழ்ந்திடுவோம்
3 . நன்றியோடும் புகழ் பாடலோடும்
அவர் வாசலில் நுழைந்திடுவோம்
நல்லவரே கிருபை உள்ளவரே
என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம்
4 . புலம்பலுக்கு பதில் ஆனந்தமே
இன்று ஆனந்தம் ஆனந்தமே
ஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சு
இன்று உற்சாக ஆவி வந்தாச்சு
5 . துயரத்துக்கு பதில் ஆறுதலே
இன்று ஆறுதல் ஆறுதலே
சாம்பலுக்குப் பதில் சிங்காரமே
இன்று சிங்காரம் சிங்காரமே
6 . கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஜனங்கள் நாம்
அவர் தாமே நம்மை நடத்துகின்றார்
அவரின் ஆடுகள் நாம்