Back

222 . Puthiya valvu tharum | புதிய வாழ்வு தரும் 

222 . புதிய வாழ்வு தரும் 

D – min / 4 / 4 / T – 104 

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே 

பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே 

1 . இருள் நிறைந்த உலகத்திலே 

வெளிச்சமாய் வாருமையா 

பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும் 

பரமனே வாருமையா 

வர வேண்டும் வல்லவரே 

வர வேண்டும் நல்லவரே 

2 . தடைகள் நீக்கும் தயாபரரே 

உடையாய் வாருமையா 

ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி 

உற்சாகம் தாருமையா 

3 . எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே 

நிரம்பி வழியணுமே 

மண்ணான உடலை வெறுத்து வெறுத்து 

என்றும் பண்பாடி மகிழணுமே – இந்த 

4 . உலகம் எங்கிலும் சுவைதரும் வெண்ணிற 

உப்பாய் மாறணுமே 

இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும் 

மரமாய் வளரணுமே

We use cookies to give you the best experience. Cookie Policy