223 . கர்த்த ருக்குள் களிகூர்ந்து
C – Maj / 6 / 8 / T – 125
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் ( என் )
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே ( என் )
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
ஆனந்த பலி ஆனந்த பலி
( என் ) அப்பாவுக்கு அப்பாவுக்கு – 2
1 . பாவ , சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு – எனவே
2 . பயமும் , படபடப்பும் ஒஞ்சு போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு – எனவே
3 . நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு – எனவே
4 . நேசக்கொடி என்மேலே பறக்குதையா . . . என்
நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா
5 . கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு என்
கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சு போச்சு