224 . அனைத்தையும்
D – Maj / 3 / 4 | T – 95
அனைத்தையும் செய்து முடிக்கும்
ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும்
தடைபடாதையா
1 . நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உமக்கே ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம்
2 . நான் எம்மாத்திரம்
ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்
3 . என்னைப் புடமிட்டால் ( நான் )
பொன்னாக துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக்
காத்துக் கொண்டேன்
4 . நான் எண்ணி முடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே – என்னை
5 . என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள் தானே அந்நாளில் காணுமே
எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா