E – min / 12 / 4 / T – 125
மகிமை தேவ மகிமை
வெளிப்படும் நாட்கள் இது – 2
மானிடர் யாவரும் காண்பார்கள்
ஏகமாய் காண்பார்கள் – 2
மகிமை மகிமை
வெளிப்படும் நாட்கள் இது – 2 – மானிடர்
1 . தேசங்கள் பெருங்கூட்டமாய்
கர்த்தரைத் தேடிவரும் – 2
ராஜாக்கள் அதிகாரிகள்
ஆர்வமாய் வருவார்கள் – மகிமை மகிமை
2 . பெரும் பெரும் செல்வந்தர்கள்
வருவார்கள் சபை தேடி – 2
தொழில் செய்யும் அதிபதிகள்
மெய் தெய்வம் காண்பார்கள் – மகிமை மகிமை
3 . ஐந்து வகை ஊழியங்கள்
சபையெங்கும் காணப்படும் – 2
அப்போஸ்தலர் இறைவாக்கினர் .
ஆயிரமாய் எழும்புவார்கள் – மகிமை மகிமை
4 . சின்னவன் ஆயிரமாவான்
சிறியவன் தேசமாவான் – 2
கர்த்தர் தாமே அவர் காலத்தில்
துரிதமாய் செய்திடுவார் – மகிமை மகிமை
5 . கடற்கரையின் திரள் கூட்டம்
கர்த்தருக்குச் சொந்தமாகும் – 2
கத்தோலிக்க சபையெங்கும்
அபிஷேக நதி பாயும் — மகிமை மகிமை
6 . அரபு தேசமெங்கும்
அபிஷேக மழை இறங்கும் – 2
இஸ்லாமியர் பெருங்கூட்டமாய்
இரட்சகரை அறிந்து கொள்வார்கள்
7 . பாரதம் மீட்படையும்
துதியால் நிரம்பிவிடும்
நாசம் அழிவு கொடுமை எல்லாம்
தேசத்தில் இருப்பதில்லை