Back

394 . Engal Porayuthangal | எங்கள் போராயுதங்கள்

F – Maj / 2 / 4 / T – 135 

எங்கள் போராயுதங்கள் 

ஆவியின் வல்லமையே – 2 

அரண்களை நிர்மூலமாக்கும் 

தேவன் தரும் பெலனே – 2 


கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால் 

வெற்றி நிச்சயமே – 2 

எங்கும் எழுப்புதல் 

இந்தியா கிறிஸ்டியா – 2 – எங்கள் 


1 . தேவனுக்கெதிரான 

எல்லா மனித எண்ணங்களை – 2 

கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் 

கீழ்ப்படுத்தி ஜெயம் எடுப்போம் – 2 – கிறிஸ்துவுக்குள் 


2 . கிறிஸ்துவின் திருவசனம் 

ஆவியின் பட்டயமே – 2 

அனுதினம் அறிக்கை செய்து 

அலகையை துரத்திடுவோம் – 2 – கிறிஸ்துவுக்குள் 


3 . நற்செய்தி முழங்குவதே 

நமது மிதியடிகள் – 2 

ஆத்தும பாரத்தினால் 

அறிவிப்போம் சுவிசேஷம் – 2 – கிறிஸ்துவுக்குள் 


4 . சத்தியம் இடைக்கச்சை  

நீதி மார்க்கவசம் – 2 

இரட்சிப்பின் நிச்சயமே 

நிரந்தர தலைக்கவசம் – 2 – கிறிஸ்துவுக்குள் 


5 . விசுவாச வார்த்தைகள்தான் 

காக்கும் நம் கேடகம் – 2 

தீயவன் தீக்கணைகள் 

அவித்து ஜெயம் எடுப்போம் – 2 – கிறிஸ்துவுக்குள் 

We use cookies to give you the best experience. Cookie Policy