Back

395 . Maravamal Ninaitheraiya | மறவாமல் நினைத்தீரையா

D – min / 3 / 4 / T – 120 

மறவாமல் நினைத்தீரையா 

மனதார நன்றி சொல்வேன் – 2 

இரவும் பகலும் எனை நினைந்து 

இதுவரை நடத்தினீரே – 2 


நன்றி நன்றி ஐயா ஆ . . , ஆ . . , 

கோடி கோடி நன்றி ஐயா – 2 – மறவாமல் 


1 . எபிநேசர் நீர்தானையா  

இதுவரை உதவினீரே – 2

எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே  

எப்படி நான் நன்றி சொல்வேன் – 2 – நன்றி 


2. பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா – 2 

சுகமானேன் சுகமானேன் 

தழும்புகளால் சுகமானேன் 

என் குடும்ப மருத்துவர் நீரே – 2 நன்றி 


3 . தடைகளை உடைத்தீரையா

தள்ளாட விடவில்லையே – 2 

சோர்ந்து போன நேரமெல்லாம் 

தூக்கி என்னை சுமந்து 

வாக்கு தந்து தேற்றினீரே – 2 – நன்றி  


4 . குறைவுகள் அனைத்தையுமே  

மகிமையிலே நிறைவாக்கினீர் – என் 

ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து 

மீதம் மீதம் எடுக்கச் செய்தீர் – 2 – நன்றி 

We use cookies to give you the best experience. Cookie Policy