D-min / 4/4 / T-95
என் தேவனே என் இராஜனே
தேடுகிறேன் அதிகாலமே
தேவையெல்லாம் நீர்தானய்யா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
1. தண்ணீர் இல்லா நிலம் போல
தாகமாய் இருக்கிறேன்
உம் வல்லமை உம் மகிமை
(என்) உள்ளமெல்லாம் ஏங்குதையா – தேவை எல்லாம்
2. படுக்கையிலும் நினைக்கின்றேன்
நடு இரவில் தியானிக்கின்றேன்
உம் நினைவு என் கனவு
உறவெல்லாம் நீர்தானய்யா
3. மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது
என் உதடு உம்மை துதிக்கும்
உயிருள்ள நாட்களெல்லாம் – என்