Back

420. Neer Ennai Thaanguvathal | நீர் என்னைத் தாங்குவதால்

D-min / 4/4 / T-85

நீர் என்னைத் தாங்குவதால்

தூங்குவேன் நிம்மதியாய்

படுத்துறங்கி விழித்தெழுவேன்

கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்


1. எதிர்த்தெழுவோர் பெருகினாலும்

கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்

கேடகம் நீர்தான் மகிமையும் நீர்தான்

தலைநிமிர செய்பவர் நீர்தான் – என்


2. கடந்த நாட்களில் நடந்த காரியம்

நினைத்து தினம் கலங்கினாலும்

நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்

என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்


3. இன்று காண்கின்ற எகிப்தியரை

இனி ஒருபோதும் காண்பதில்லை

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்

காத்திருப்பேன் நான் பொறுமையுடன்


4. முன்குறித்தீரே பிரித்தெடுத்தீரே

நீதிமானாக தினம் பார்க்கின்றீர்

மன்றாடும் போது செவிசாய்க்கின்றீர்

என்பதை நான் அறிந்து கொண்டேன்


5. உலகம் தரும் மகிழ்வை விட

மிக மேலான மகிழ்ச்சி நீரே

நீர் ஒருவரே பாதுகாத்து

சுகமாய் தினம் வாழ செய்வீர் 

We use cookies to give you the best experience. Cookie Policy