E – 105 – 4 / 4
கைதூக்கி எடுத்தீரே
நான் உம்மைப் போற்றுகிறேன்
1 . எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்
தூக்கி எடுத்தீரே
உயிருள்ள நாட்களெல்லாம்
நான் உம்மைப் போற்றுகிறேன்
நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே
2 . என் தேவனே தகப்பனே
என்று நான் கூப்பிட்டேன்
நீர் என்னை குணமாக்கினீர்
சாகாமல் பாதுகாத்தீர்
3 . மாற்றினீரே அழுகையை
போற்றி புகழ்கின்றேன்
துயரம் நீக்கினீரே
மகிழ்ச்சியால் உடுத்தினீரே
4 . இரவெல்லாம் அழுகையென்றால்
பகலில் ஆனந்தமே
கோபமோ ஒரு நிமிடம்
தயவோ வாழ்நாளெல்லாம்
5 . உம் தயவால் என் பர்வதம்
நிலையாய் நிற்கச் செய்தீர்
திருமுகம் மறைந்தபோது
மிகவும் கலங்கி போனேன்