Back

256 . Kankalai pathiya | கண்களை பதிய 

256 . கண்களை பதிய 

D – Maj / 2 / 4 / T – 150 

கண்களைப் பதிய வைப்போம் 

கர்த்தராம் இயேசுவின் மேல் 

கடந்ததை மறந்திடுவோம் 

தொடர்ந்து முன் செல்லுவோம் 

1 . சூழ்ந்து நிற்கும் சுமைகள்  

நெருங்கிப் பற்றும் பாவங்கள்

உதறித் தள்ளிவிட்டு 

ஓடுவோம் உறுதியுடன் 

2 . இழிவை எண்ணாமலே 

சிலுவையைச் சுமந்தாரே 

வல்லவர் அரியணையின் 

வலப்பக்கம் வீற்றிருக்கின்றார் 

3 . தமக்கு வந்த எதிர்ப்பை 

தாங்கிக் கொண்ட அவரை 

சிந்தையில் நிறுத்திடுவோம் – ( மனம் ) 

சோர்ந்து போகமாட்டோம் 

4 . ஓட்டத்தைத் தொடங்கினவர் 

தொடர்ந்து நடத்திடுவார் – நம் 

நிறைவு செய்திடுவார் 

நிச்சயம் பரிசு உண்டு

We use cookies to give you the best experience. Cookie Policy