Back

258 . Pasumayana | பசுமையான

258 . பசுமையான 

D – Maj / 6 / 8 / T – 105 

பசுமையான புல்வெளியில் 

படுக்க வைப்பவரே 

அமைதியான தண்ணீரண்டை 

அழைத்துச் செல்பவரே 

என் மேய்ப்ப ரே . . .  . . நல் ஆயனே 

எனக்கொன்றும் குறையில்லப்பா 

நோயில்லாத சுகவாழ்வு எனக்குத் தந்தவரே 

கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே 

1 . புதிய உயிர் தினம் தினம் 

எனக்குத் தருகிறீர் 

உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் 

நடத்திச் செல்கிறீர் 

2 . மரண இருள் பள்ளத்தாக்கில் 

நடக்க நேர்ந்தாலும் 

அப்பா நீங்க இருப்பதாலே 

எனக்குப் பயமில்ல 

3 . ஜீவனுள்ள நாட்களெல்லாம் 

நன்மை தொடருமே 

தேவன் வீட்டில் தினம் தினம் 

தங்கி மகிழ்வேனே 

4 , கரங்களாலே அணைத்துக் கொண்டு ,

சுமந்து செல்கிறீர் 

மறந்திடாமல் உணவு கொடுத்து , 

பெலன் தருகிறீர் 

5 . எனது உள்ளம் அபிஷேகத்தால் 

நிரம்பி வழியுதே 

எல்லா நாளும் நன்றிப் பாடல் 

பாடி மகிழுதே

We use cookies to give you the best experience. Cookie Policy