Back

265 . Maranamae | மரணமே 

265 . மரணமே 

D – min / 2 / 4 | T – 125 

மரணமே உன் கூர் எங்கே ? 

பாதாளமே உன் ஜெயம் எங்கே ? 

மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு 

எனக்குள் வந்துவிட்டார் 

சாவை அழித்து அழியா வாழ்வை 

எனக்குத் தந்துவிட்டார் 

1 . சாவுக்கு அதிபதி சாத்தானை – இயேசு 

சாவாலே வென்றுவிட்டார் 

மரண பயத்தினால் வாடும் மனிதரை 

விடுவித்து மீட்டுக் கொண்டார் 

பயமில்லையே மரண பயமில்லையே 

ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார் 

2 . அழிவுக்கு உரிய இவ்வுடல் ஒருநாள் 

அழியாமை அணிந்து கொள்ளும் 

சாவுக்கு உரிய இவ்வுடல் ஒரு நாள் 

சாகாமை அணிந்து கொள்ளும் 

3 . இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும் 

ஆளுகை செய்திடவே 

இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார் 

இன்றைக்கும் ஜீவிக்கிறார் 

4 . கட்டளை பிறக்க தூதர் குரல் ஒலிக்க 

கர்த்தர் இயேசு வந்திடுவார் 

கிறிஸ்துவுக்குள் வாழ்வோர் கிறிஸ்துவுக்குள் மரித்தோர் 

எதிர் கொண்டு சென்றிடுவோம் 

5 . பூமிக்குரிய கூடாரமான 

இவ்வீடு அழிந்தாலும் 

பரமன் கட்டிய நிலையான வீடு 

பரலோகத்தில் உண்டு 

6 . அகரமும் னகரமும் தொடக்கமும் முடிவும் 

நான் தானே என்று சொன்னவர் 

அவனவன் கிரியைக்குத் தகுந்த பரிசு அளிக்க 

சீக்கிரத்தில் வருகின்றார் 

We use cookies to give you the best experience. Cookie Policy