Back

271 . Ennai | என்னைப் 

271 . என்னைப் 

E – Maj / 6 / 8 / T – 130 

என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால் 

எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் 

1 . கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார் 

அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார்
 

2 . தீயோர் என் உடலை விழுங்க நெருங்குகையில் 

இடறி விழுந்தார்கள் இல்லாமல் போனார்கள் 

3 . படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும் 

என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது 

4 . கேடு வரும் நாளிலே கூடார மறைவினிலே 

மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார் 

5 . எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில் 

என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காணச் செய்வார் 

6 . அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன் 

பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன்
 

7 . நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும் 

இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்

We use cookies to give you the best experience. Cookie Policy