272 . எங்கள் ஜெபங்கள்
D – min / 6 / 8 / T – 105
எங்கள் ஜெபங்கள் தூபம் போல
உம் முன் எழவேண்டுமே
1 . ஜெபிக்கும் எலியாக்கள்
தேசமெங்கும் எழவேண்டும்
உடைந்த பலிபீடம் ( உறவுகள் )
சரி செய்யப்படவேண்டும்
தகப்பனே ஜெபிக்கிறோம் ( 2 )
2 . பரலோக அக்கினி
எங்கும் பற்றி எரியவேண்டும்
பாவச் செயல்கள்
சுட்டெரிக்கப்படவேண்டும்
3 . தூரம் போன ஜனங்கள்
உம் அருகே வரவேண்டும்
கர்த்தரே தெய்வமென்று
காலடியில் விழவேண்டும்
4 . பாகால்கள் இந்தியாவில்
இல்லாமல் போகவேண்டும்
பிசாசின் கிரியைகள்
முற்றிலும் அழியவேண்டும்
5 . பாரத தேசத்தை
ஜெப மேகம் மூடவேண்டும்
பெரிய காற்றடித்து
பெருமழை பெய்யவேண்டும்