282 . திருப்தியாக்கி
E – Maj / 6 / 8 | T – 140
திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
மீதம் எடுக்க வைப்பார்
பிறருக்குக் கொடுக்க வைப்பார்
பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்
1 . ஐந்து அப்பங்களை ,
ஆயிரமாய் பெருகச்செய்தார்
ஐயாயிரம் ஆண்களுக்கு ,
வயிராற உணவளித்தார்
2 . பொன்னோடும் பொருளோடும் , ‘
புறப்படச் செய்தாரே
பலவீனம் இல்லாமலே ,
பாதுகாத்து நடத்தினாரே – ஒரு
3 . காடைகள் வரவழைத்தார் ,
மன்னாவால் உணவளித்தார்
கற்பாறையை பிளந்து ,
தண்ணீர்கள் ஓடச்செய்தார்
4 . நீடிய ஆயுள் தந்து ,
நிறைவோடு நடத்திடுவார்
முதிர் வயதானாலும் ,
பசுமையாய் வாழச் செய்வார்