Back

283 . Mugamalarnthu | முகமலர்ந்து 

283 . முகமலர்ந்து 

E – min 6 / 8 / T – 100 

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார் 

உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம் 

1 . வருத்தத்தோடல்ல , கட்டாயத்தாலல்ல 

இருப்பதை விருப்பமுடன் , கொடுத்திடுவோம் 

விதை விதைத்திடுவோம் 

அறுவடை செய்வோம் 

2 . அதிகமாய் விதைத்தால் , அதிக அறுவடை 

ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை 

அளவின்றி கொடுத்து , செல்வர்களாவோம் 

அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார் 

3 . ஏழைக்கு இரங்கி கொடுக்கும் போதெல்லாம் 

கர்த்தருக்குக் கடன் கொடுத்துத் திரும்பப் 

பெற்றிடுவோம் 

எந்த நிலையிலும் தேவையானதெல்லாம் 

எப்போதும் நமக்குத் தந்திடுவாரே 

4 . நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும் 

மிகுதியாகவே தந்திடுவாரே 

எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர் 

குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார் 

We use cookies to give you the best experience. Cookie Policy