306 . இதயங்கள் மகிழட்டும்
E – Maj / 4 / 4 | T – 90
இதயங்கள் மகிழட்டும்
முகங்கள் மலரட்டும் ( சிரிக்கட்டும் )
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
1 . மன்னித்து அணைத்துக்கொண்டார்
மகனாய் சேர்த்துக்கொண்டார்
கிருபையின் முத்தங்களால்
புது உயிர் தருகின்றார்
கோடி நன்றி
பாடிக் கொண்டாடுவோம்
2 . அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்
தலைமுறை , தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே
3 . தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்
உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார்
4 . தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்
நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம்
5 , உண்டாக்கினார் நம்மை , அவரில் மகிழ்ந்திருப்போம்
ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம்
6 . தமது ஜனத்தின்மேல் பிரியம் வைக்கின்றார்
அதிசய இரட்சிப்பினால் அலங்கரிக்கின்றார்
7 . நல்லவர் நல்லவரே ( அவர் ) கிருபை உள்ளவரே
அவரது பேரன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்
8 . சஞ்சலமும் தவிப்பும் பறந்து ஓடியதே
நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி நம் தலைமேல்