308. உந்தன் நாமத்தில்
E – Maj / 4 / 4 | T – 95
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே
உந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால்
1 . உந்தன் வார்த்தையால்
புயல் காற்று ஓய்ந்தது
உந்தன் பார்வையால்
திருந்தினார் பேதுரு – கூடாதது
2 . தபித்தாள் மரித்தாள்
ஜெபத்தால் உயிர்த்தாள்
திமிர்வாத ஐனேயா
சுகமாகி நடந்தான்
3 . மீனின் வாயிலே , காசு வந்ததே
கழுதையின் வாயிலே , பேச்சு வந்ததே
4 . வாலிபன் ஐத்திகு தூக்கத்தால் விழுந்தான்
இறந்தும் எழுந்தான் ,
பவுல் அன்று ஜெபித்ததால்
5 . காலூன்றி நில்லென்று
கத்தினார் பவுல் அன்று
முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே
6 . எலிசாவின் சால்வையால்
யோர்தான் பிரிந்தது
எரிகோவின் உப்பு நீர்
ஆரோக்கியமானது
7 . கோடாரி மிதந்தது
எலிசாவின் வார்த்தையால்
குஷ்டம் மறைந்தது
யோர்தானில் குளித்ததால்