314 . இப்போதும் எப்போதும்
E – min / 6 / 8 / T – 100
இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்
தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்
துதிபலி ( அது ) சுகந்த வாசனை
நன்றி பலி அது உகந்த காணிக்கை
1 . எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற
தேவனின் கிருபையே பிரசன்னமானீரே
துதிக்கிறேன் தூயவரே
போற்றுகிறேன் புண்ணியரே
2 . தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்
வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே
3 . நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா
நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா
4 . தேவ பக்தியுடன் , தெளிந்த புத்தியோடு
இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்
5 . சொந்த மகனாக தூய்மையாக்கிடவே
உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே
6 . மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்
இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்
7 . நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால்
நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப் பரிசாக