320 . இரக்கங்களின்
D – Min / 6 / 8 / T – 125
இரக்கங்களின் தகப்பன் இயேசு
இன்றே உனக்கற்புதம் செய்வார்
நீ கலங்காதே நீ திகையாதே
உன் கண்ணீர்கள் துடைக்கப்படும்
1 . திரளான ஜனங்களைக் கண்டார்
மனதுருகி நோய்கள் நீக்கினார்
ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார்
அனைவரையும் போஷித்து அனுப்பினார்
வாழ்கிறார் இயேசு வாழ்கிறார்
எல்லாம் செய்ய வல்லவர் – நீ கலங்
2 . விதவையின் கண்ணீரைக் கண்டார்
மனதுருகி அழாதே என்றார்
கிட்ட வந்து பாடையைத் தொட்டார்
மரித்தவன் உட்கார்ந்து பேசினான் – வாழ்
3 . முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகே
படுத்திருந்த மகனைத் தேடிச் சென்றார்
படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கச் செய்தார்
( இனி ) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார்
4 . தொலைவில் வந்த தன் மகனைக் கண்டார்
மனதுருகி ஓடிச் சென்றார்
கழுத்தைக் கட்டி முத்தங்கள் கொடுத்தார்
கொழுத்த கன்று அடித்துக் கொண்டாடினார்
5 . புயல் காற்றில் போராடும் சீடர்களைக் கண்டு
கடலின் மேல் நடந்தே வந்தார்
பயப்படாதிருங்கள் என்று தேற்றினார்
படகில் ஏறி பெருங்காற்றை அமர்த்தினார்