Back

322 . Ullathin Makilchi |உள்ளத்தின் மகிழ்ச்சி 

322 . உள்ளத்தின் மகிழ்ச்சி 

F – Min / 3 / 4 / T – 140 

உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா 

இல்லத்தில் எல்லாமே நீர்தானையா – என் 

என் தேவையெல்லாம் நீர்தானே 

ஜீவனுள்ள நாளெல்லாம் 

1 . வழிகள் அனைத்தையும் , 

உம்மிடம் ஒப்படைத்தேன்  

என் சார்பில் செயலாற்றுகிறீர் 

எல்லாமே செய்து முடிப்பீர் 

2 . பட்டப்பகல்போல , ( என் ) 

நீதியை விளங்கச் செய்வீர் 

நோக்கி அமர்ந்திருப்பேன் , 

உமக்காய்க் காத்திருப்பேன் 

3 . கோபங்கள் , எரிச்சல்கள் , 

அகற்றி எரிந்து விட்டேன் 

நம்பியுள்ளேன் உம்மையே , 

நன்மைகள் செய்திடுவேன் 

4 . பாதத்தில் வைத்து விட்டேன் , 

பாரங்கள் , கவலைகள் – உம் 

தள்ளாட விடமாட்டீர் 

தாங்கியே நடத்திச் செல்வீர்

We use cookies to give you the best experience. Cookie Policy