Back

324 . Yesu Rajanae | இயேசு ராஜனே 

324 . இயேசு ராஜனே 

F – Maj / 4 / 4 / T – 90 

இயேசு ராஜனே 

நேசிக்கிறேன் உம்மையே 

உயிருள்ள நாளெல்லாம் 

உம்மைத்தான் நேசிக்கிறேன் 

நேசிக்கிறேன் – ( 4 ) – உயிருள்ள

1 . அதிசயமானவரே , ஆறுதல் நாயகரே 

சந்தோஷமே , சமாதானமே 

உம்மைத்தான் நேசிக்கிறேன் – நேசிக் 

2 . இம்மானுவேல் நீர்தானே , எப்போதும் இருப்பவரே 

ஜீவன் தரும் , திருவார்த்தையே – உம்மை  

3 . திராட்சைச் செடி நீரே , தாவீதின் வேர் நீரே 

விடிவெள்ளியே , நட்சத்திரமே 

4 . யோனாவிலும் பெரியவரே 

சாலமோனிலும் பெரியவரே 

ரபூனியே போதகரே 

5 . பாவங்கள் நிவர்த்தி செய்யும் , 

கிருபாதார பலி நீரே 

பரிந்து பேசும் ஆசாரியரே

We use cookies to give you the best experience. Cookie Policy