Back

50. aandavarae | ஆண்டவரே

50 . ஆண்டவரே c – Maj | 4 / 4 | T – 100 

ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் 

அடிமை நான் ஐயா 

ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் 

அகன்று போக மாட்டேன் – உம்மை விட்டு 

அகன்று போக மாட்டேன் 

1 . ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு 

அதன்படி நடக்கின்றேன்

உலகினை மறந்து உம்மையே நோக்கி 

ஓடி வருகின்றேன்

 2 . வாலிபன் தனது வழிதனையே 

எதனால் சுத்தம் பண்ணுவான் 

தேவனே உமது வார்த்தையின்படியே 

காத்துக் கொள்வதனால் சங் . 119 : 9 

3 . வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் 

நன்கு புரியும்படி 

தேவனே எனது கண்களையே 

தினமும் திறந்தருளும் சங் . 119 : 18

 4 . நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும் 

தீபமே உம் வசனம் 

செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே 

தேவனே உம் வாக்கு சங் . 119 : 105  

5 . தேவனே உமக்கு எதிராய் நான் 

பாவம் செய்யாதபடி 

உமது வாக்கை என் இருதயத்தில் பதித்து வைத்துள்ளேன் சங் . 119 : 11

We use cookies to give you the best experience. Cookie Policy