58 . கலங்காதே c – min / 4 / 4 | T – 96
கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்
1 . முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக மத் . 27 : 29
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகி விடு – நீ
2 . கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார் ஏசா . 53 : 5
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீ ரோடு ஓடி வா – நீ
3 . காலமெல்லாம் உடன் இருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் – உன்னை
4 . உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி ( நீ )
மறைவாக இருக்காதே மத் . 5 : 14
5 . உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார் ஏசா . 49 : 16
6 . உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார் மத் . 8 : 17
நீ சுமக்கக் தேவையில்லை
விசுவாசி அது போதும்