Back

341 . Thuyarathil | துயரத்தில் 

G – Maj | 4 /4 / T – 92 

துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் 

அழுகுரல் கேட்டீரையா 

குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர் ( ரே ) 

உமது காருண்யத்தால் – ( குனிந்து தூக்கினீரே )

 

1 . எனது விளக்கு எரியச் செய்தீர் 

இரவைப் பகலாக்கினீர் 

எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் ( மே ) உமக்காய் 

என் ஜீவன் பிரியும் வரை ( எரிந்து கொண்டேயிருப்பேன் ) 

2 . நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம் 

நீர்தான் நீர்தானய்யா 

தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர் ( ரே ) 

ஆறுதல் நீர்தானய்யா – ( தூயவர் தூயவரே ) 

3 . சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே 

மதிலைத் தாண்டிடுவேன் 

புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன் 

உயிர் வாழும் நாட்களெல்லாம் 

( புகழ்ந்து பாடிடுவேன் ) 

We use cookies to give you the best experience. Cookie Policy