Back

346 . Eppothum En | எப்போதும் என்

F Maj / 3 / 4 / T – 135 

எப்போதும் என் முன்னே 

உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் 

என் மேய்ப்பர் நீர்தானையா 

குறை ஒன்றும் எனக்கில்லையே 

என் நேசரே என் மேய்ப்பரே 

எப்போதும் நீர்தானையா 

என் முன்னே நீர்தானையா 

1 . உம் இல்லம் ஆனந்தம் 

பரிபூரண ஆனந்தம் 

பேரின்பம் நீர்தானையா 

நிரந்தர பேரின்பமே – என் நேசரே 

2 . என் இதயம் மகிழ்கின்றது 

உடலும் இளைப்பாறுது 

எனைக் காக்கும் தகப்பன் 

நீரே பரம்பரைச் சொத்தும் நீரே 

3 . என் செல்வம் என் தாகம் 

எல்லாமே நீர்தானையா 

எனக்குள்ளே வாழ்கின்றீர் 

அசைவுற விடமாட்டீர் 

4 . கல்வாரி எனக்காக 

காயங்கள் எனக்காக 

திரு இரத்தம் எனக்காக 

சிந்தியே ஜீவன் தந்தீர்

We use cookies to give you the best experience. Cookie Policy