D – min / 214 / T – 132
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே
முழங்கிடுவேன் சுவிசேஷம்
சிறுமைப்பட்ட அனைவருக்கும்
அபிஷேகம் என்மேலே
ஆவியானவர் எனக்குள்ளே
1 . இதயங்கள் நொறுக்கப்பட்டோர்
ஏராளம் ஏராளம்
காயம் கட்டுவேன் தேசமெங்கும்
இயேசுவின் நாமத்தினால்
2 . சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்
விடுதலை பெறணுமே
கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்
கட்டுக்களை உடைக்கணும்
3 . துதியின் உடை போர்த்தணுமே
ஒடுங்கின ஜனத்திற்கு
துயரத்திற்குப் பதிலாக
ஆனந்த தைலம் வேண்டுமே
4 . கிருபையின் காலம் இதுவன்றோ
அறிவிக்கணும் மிகவேகமாய்
இரட்சகர் இயேசு வரப்போகிறார்
ஆயத்தமாகணுமே