Back

349 . En Thagappan | என் தகப்பன் 

E Maj / 4 / 4 | T – 109 

என் தகப்பன் நீர்தானையா 

எல்லாமே பார்த்துக் கொள்வீர் 

எப்போதும் எவ்வேளையும் – உம் 

கிருபை என்னைத் தொடரும் 

1 . மாண்புமிக்கவர் நீர்தானே 

மிகவும் பெரியவர் நீர்தானே 

உம்மையே புகழ்வேன் – ஓய்வின்றி 

உம்மைத்தான் பாடுவேன் – பெலத்தோடு 

உயிருள்ள நாளெல்லாம் ( 2 ) – என் தகப்பன் 

2 . தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர் 

விழுந்தவரை நீர் தூக்குகிறீர் – உம்மையே 

3 . ஏற்ற வேளையில் அனைவருக்கும் 

ஆகாரம் நீர் தருகின்றீர் 

4 . சகல உயிர்களின் விருப்பங்களை 

திருப்தியாக்கி நீர் நடத்துகிறீர் 

5 . நோக்கிக் கூப்பிடும் யாவருக்கும் 

தகப்பன் அருகில் இருக்கின்றீர் 

6 . அன்பு கூருகின்ற அனைவரையும் 

காப்பாற்றும் தெய்வம் நீர்தானே 

7 . துதிக்குப் பாத்திரர் நீர் தானே 

தூயவரும் நீர் தானே 

8 . இரக்கமும் கனிவும் உடையவரே 

நீடிய சாந்தம் உமதன்றோ 

We use cookies to give you the best experience. Cookie Policy