D Maj / 4 / 4 | T – 98
செடியே திராட்சைச் செடியே
கொடியாக இணைந்து விட்டேன்
உம் ( தகப்பன் ) மடிதான் என் வாழ்வு
உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு
1 . கத்தரித்தீரே தயவாய்
கனிகள் கொடுக்கும் கிளையாய்
சுத்தம் செய்தீரே இரத்தத்தால்
சுகந்த வாசனையானேன் – உம் மடிதான்
2 . பிதாவின் மகிமை ஒன்றே
பிள்ளை எனது ஏக்கம்
மிகுந்த கனிகள் கொடுப்பேன்
உகந்த சீடனாவேன்
3 . ஆயன் சத்தம் கேட்டு
உம் அன்பில் நிலைத்து வாழ்வேன்
பிரிக்க இயலாதையா ( உம்மை விட்டு )
பறிக்க முடியாதையா – 2