E – Maj / 4 / 4 | T – 105
உமக்காகத் தானே ஐயா நான்
உயிர் வாழ்கிறேன் ஐயா
இந்த உடலும் உள்ளமெல்லாம் – அன்பர்
உமக்காகத் தானே ஐயா
1 . கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்
உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்
அவமானம் நிந்தை சிலுவைதனை
அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன்
2 . எனது ஜீவனை மதிக்கவில்லை
ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை
எல்லாருக்கும் நான் எல்லாமானேன்
அனைவருக்கும் நான் அடிமையானேன்
3 . எத்தனை இடர்கள் வந்தாலும்
எதுவும் என்னை அசைப்பதில்லை
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்
மனநிறைவோடு பணி செய்வேன்
4 . பண்படுத்தும் உம் சித்தம் போல
பயன்படுத்தும் உம் விருப்பம் போல
உம் கரத்தில் நான் புல்லாங்குழல்
ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே
5 . எனது பேச்செல்லாம் உமக்காக
எனது செயல் எல்லாம் உமக்காக
எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக
அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக