Back

91 . um namam padanumae | உம் நாமம் பாடணுமே

E – Maj / 4 / 4 / T – 106 

உம் நாமம் பாடணுமே ராஜா 

உம்மையே துதிக்கணுமே 

உம்மைப் போல் வாழணுமே 

1 . ஒவ்வொரு நாளும் உம் திருப்பாதம் 

ஓடி வர வேணுமே 

உமது வசனம் தியானம் செய்து 

உமக்காய் வாழணுமே

2 . இரவும் பகலும் ஆவியிலே நான்

நிரம்பி ஜெபிக்கணுமே 

ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை 

வாழ வைக்கணுமே

3 . பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி 

பிரசங்கம் பண்ணணுமே . 

சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி 

சீடர் ஆக்கணுமே

We use cookies to give you the best experience. Cookie Policy