Back

98 . vaathai unthan | வாதை உந்தன்

E – Maj / 6 / 8 / T – 140 

வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே 

பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

1 . உன்னதமான கர்த்தரையே . 

உறைவிடமாக்கிக் கொண்டாய்

அடைக்கலமாம் ஆண்டவனை 

ஆதாயமாக்கிக் கொண்டாய்

2 . ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் 

சாத்தானை ஜெயித்து விட்டோம் 

ஆவி உண்டு வசனம் உண்டு 

அன்றாடம் வெற்றி உண்டு – நமக்கு  

3 . கர்த்தருக்குள் நம் பாடுகள் 

ஒரு நாளும் வீணாகாது 

அசையாமல் உறுதியுடன் 

அதிகமாய் செயல்படுவோம்

4 . நம்முடைய குடியிருப்பு 

பரலோகத்தில் உண்டு 

வரப்போகும் இரட்சகரை 

எதிர்நோக்கி காத்திருப்போம்

5 . அழைத்தவரோ உண்மையுள்ளவர் 

பரிசுத்தமாக்கிடுவார் 

ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் 

குற்றமின்றி காத்திடுவார்

6 . அற்பமான ஆரம்பத்தை 

அசட்டை பண்ணாதே

தொடங்கினவர் முடித்திடுவார்

சொன்னதை செய்திடுவார் 

 7 . ஆற்றல் அல்ல சக்தி அல்ல 

ஆவியினால் ஆகும்

சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்

துணையாளர் முன் செல்கிறார்

We use cookies to give you the best experience. Cookie Policy