139 . பரலோகந்தான்
F – Maj / 6 / 8 / T – 135
பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம்தான் என் மூச்சு
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய்
தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா
1 . என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
தன்னோடு சேர்த்துக் கொள்வார்
கூடவே வைத்துக் கொள்வார் – என்னை
2 . உருமாற்றம் அடைந்து
முகமுகமாக என் நேசரைக் காண்பேன்
தொட்டு தொட்டுப் பார்ப்பேன் – இயேசுவை
3 . சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
பாடச் சொல்லிக் கேட்பேன் – அங்கு
சேர்ந்து பாடிடுவேன்
அங்கு நடனமாடிடுவேன்
4 . என் சொந்த தேசம் பரலோகமே
எப்போது நான் காண்பேன்
ஏங்குகிறேன் தினமும் – நான்
5 . என்னோடு கூட கோடான கோடி
ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
கூட்டிச் சென்றிடுவேன்