187 . இராஜா நீர் செய்த
C – min / 6 / 8 & 2 / 4 / T – 112
இராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
ஏறெடுப்பேன் நன்றி பலி
என் ஜீவ நாளெல்லாம் – நான்
1 . அதிகாலை நேரம் தட்டித் தட்டி எழுப்பி
புதுக்கிருபை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா – 2
நன்றி ராஜா இயேசு ராஜா – ( 4 )
2 . வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளிச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரையா
3 . ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழி நடத்தி வந்தீரையா
4 . துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
தூக்கிச் சென்றீரையா
அன்பர் உம் கரத்தால் அணைத்து
அணைத்து தினம் ஆறுதல் தந்தீரையா ( அதிசயம் செய்தீரையா )
5 . கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரையா
குறைகளை நீக்கி கறைகளைப் போக்கி
கூடவே வந்தீரையா
6 . உமக்காக வாழ உம் நாமம் சொல்ல
தெரிந்து எடுத்தீரையா
உம்மோடு வைத்து ஊழியனாக
உருவாக்கி வந்தீரையா