198 . ஆவியானவரே
D – Maj / 3 / 4 | T – 100
ஆவியானவரே ( என் ) அன்பு நேசரே
ஆட்கொண்டு நடத்துமையா
1 . உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
உம் வழிகள் கற்றுத் தாரும்
உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம் நடத்துமையா
2 . கண்ணின் மணி போல காத்தருளும்
கழுகு போல சுமந்தருளும்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
எந்நாளும் மூடிக் கொள்ளும்
3 . வெயில் நேரத்தில் குளிர் நிழலே
புயல் காற்றில் புகலிடமே
கடுமழையில் காப்பகமே
நான் தங்கும் கூடாரமே
4 . நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே
சுட்டெரிப்பின் ஆவியானவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும்
பரிசுத்த ஆவியானவரே