Back

407 .En meethu | என்மீது 

Dm – 95 – 4 / 4 

என்மீது அன்புகூர்ந்து 

பலியானீர் சிலுவையிலே 

எனக்காய் இரத்தம் சிந்தி 

கழுவினீர் குற்றம் நீங்க 

பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால் 

உமக்கென்று வாழ்ந்திட 


ஆராதனை உமக்கே 

அனுதினமும் உமக்கே 


1 . பிதாவான என் தேவனே 

தகப்பனே என் தந்தையே 

மாட்சிமையும் மகத்துவமும் 

உமக்குத்தானே என்றென்றைக்கும் 

வல்லமையும் மகிமையும் 

தகப்பனே உமக்குத்தானே


2 . உம் இரத்தத்தால் பிதாவோடு 

ஒப்புரவாக்கி மகிழச் செய்தீர் 

கறைபடாத மகன ( ளாக 

நிறுத்தி தினம் பார்க்கின்றீர் 


3 . மாம்சமான திரையை அன்று 

கிழித்து புது வழி திறந்தீர் – உம் 

மகா மகா பரிசுத்த உம் 

திருச்சமுகம் நுழையச் செய்தீர்  


4 . உம் சமூகம் நிறுத்தினீரே 

உமது சித்தம் நான் செய்திட 

அரசராக குருவாக 

ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய

We use cookies to give you the best experience. Cookie Policy