Back

411 . Hand of God என் மேலே 

Fm – 135 – 6 / 8 


Hand of God என்மேலே 

நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் 


எஸ்ரா நான் நெகேமியா நான் 

என் மேல கர்த்தர் கரம் 

எஸ்தர் நான் தெபோராள் நான் 

என் மேல கர்த்த ர் கரம் 


கொடுக்கும் கரம் ( வழி ) நடத்தும் கரம் 

காக்கும் கரம் விலகாத கரம் 


1 . மனதுருகி குஷ்டரோகியை 

தொட்டு சுகம் தந்த கரம் 

நிமிரக்கூடாத கூனியை அன்று 

நிமிரச் செய்த நேகர் கரம் 


2 . ஐந்து அப்பம் கையில் ஏந்தி 

பெருகச் செய்த அற்புத கரம் 

வாலிபனே எழுந்திரு என்று 

பாடையைத் தொட்டு எழுப்பின கரம் 


3 . தலித்தாகூம் என்று சொல்லி 

மரித்தவளை தூக்கி நிறுத்தின கரம் 

வெட்டப்பட்ட காதை அன்று 

ஒட்ட வைத்த கர்த்தர் கரம்


4 . எலிசா மேல் அமர்ந்த கரம் 

இறைவாக்கு சொல்ல வைத்த கரம் 

இரதத்திற்கு முன் எலியாவை 

ஓட வைத்த தேவ கரம்

We use cookies to give you the best experience. Cookie Policy