T-88 4/4
அப்பா பிதாவே அன்பான தேவா 
அருமை இரட்சகரே ஆவியானவரே      
1 . எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் 
என் நேசர் தேடி வந்தீர் 
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து 
நிழலாய் மாறி விட்டீர் 
நன்றி உமக்கு நன்றி - அப்பா 
2 . தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் 
தயவாய் நினைவு கூர்ந்தீர் 
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து 
கரம் பற்றி நடத்துகிறீர் - நன்றி 
3 . உளையான சேற்றில் வாழ்ந்த என்னை 
தூக்கி எடுத்தீரே         
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி 
கழுவி அணைத்தீரே        
4 . இரவும் பகலும் ஐயா கூட இருந்து 
எப்போதும் ( எந்நாளும் ) காப்பவரே 
மறவாத தெய்வம் மாறாத நேசர் 
மகிமைக்குப் பாத்திரரே 
5 . ஒன்றை நான் கேட்டேன் - அதையே 
நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன் 
உயிரோடு வாழும் நாட்களெல்லாம் 
உம்பணி செய்திடுவேன் 
Appaa Pithaave Anbaana Devaa
Arumai Ratchakare Aaviyaanavare – 2
1. Engo Naan Vaazhnthen Ariyaamal Alainthen
En Nesar Thedi Vantheer – 2
Nenjaara Anaiththu Muththangal Koduththu
Nizhalaai Maarivitteer – 2
Nandri Umakku Nandri – Aiyaa (2) (… Appaa)
2. Thaazhmaiyil Irunthen Thallaadi Nadanthen
Thayavaay Ninaivu Koorntheer – 2
Kalangaathe Endru Kanneerai Thudaiththu
Karampattri Nadaththukireer – 2 (… Nandri)
3. Ulaiyaana Settril Vaazhntha Ennai
Thookki Eduththeere – 2
Kalvaari Raththam Enakkaaka Sinthi
Kazhuvi Anaiththeere – 2 (… Nandri)
4. Iravum Pakalum Aiyaa Kooda Irunthu
Eppothum (Ennaalum) Kaappavare – 2
Maravaatha Dheyvam Maaraatha Nesar
Makimaikku Paaththirare – 2 (… Nandri)
5. Ondrai Naan Ketten Athaiye Naan Thedi
Aarvamaai Naadukiren – 2
Uyirodu Vaazhum Naatkalellaam
Um Pani Seithiduven – 2 (… Nandri)
 
 
                            